
கொல்கத்தா,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் போர்ப்பதற்றம் காரணமாக ஒரு வார காலம் நிறுத்தி வைக்கப்பட்ட ஐ.பி.எல். தொடர் மீண்டும் நேற்று தொடங்கியது.
இருப்பினும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான ஆட்டம் மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.
இதனால் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 13 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 6 தோல்வி, 2 முடிவில்லையுடன் 12 புள்ளி 4-வது அணியாக அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து நடையை கட்டியது. இந்த அணிக்கு இன்னும் ஒரு லீக் ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ளது.
இந்நிலையில் ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து கொல்கத்தா அணியின் ஆல் ரவுண்டர் ரோவ்மன் பவல் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான ஷிவம் சுக்லாவை கொல்கத்தா அணி ஒப்பந்தம் செய்துள்ளது.