லக்னோ,
மும்பை-ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் தொடர் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி தனது முதல் இன்னிங்சில் 537 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் சர்பராஸ் கான் இரட்டை சதம் (222 ரன்) அடித்து அசத்தினார்.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ரெஸ்ட் ஆப் இந்தியா 87 ஓவர்களில் 339 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. இந்நிலையில், தனது இந்த சிறப்பான ஆட்டம் குறித்து பேசியிருந்த சர்பராஸ் கான் கூறியதாவது, என் தம்பி இந்த தொடரில் விளையாடி இருந்தால் எனது அப்பா மிகவும் சந்தோஷப்பட்டு இருப்பார். ஆனால் துரதிஷ்டவசமாக அவர் அவருக்கு விபத்து ஏற்பட்டது. அதன் காரணமாகவே நான் இந்த போட்டியில் விளையாடினேன். இது எனக்கு ஒரு உணர்ச்சிகரமான வாரமாக இருந்தது.
ஏனெனில் இந்த போட்டிக்கு முன்னதாக என்னுடைய தம்பி விபத்துக்குள்ளானார். நான் இந்த போட்டியில் களமிறங்கும் முன்னரே நான் செட்டில் ஆகிவிட்டால் நிச்சயம் இரட்டை சதம் அடிப்பேன் என்று எனது குடும்பத்தாரிடமும், எனது சக அணி வீரர்களும் உறுதி அளித்திருந்தேன். அந்த வகையில் இந்த போட்டியில் எனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்ததில் மிகவும் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.