நான் அழவில்லை.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சமந்தா

3 hours ago 2

சென்னை,

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா. இவர் கடந்த 2010ம் ஆண்டு திரைக்கு வந்த 'விண்ணைதாண்டி வருவாயா' படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து தெலுங்கு, பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.

இதற்கிடையே நடிகை சமந்தா 2023-ம் ஆண்டு "திரலாலா மூவிங் பிக்சர்ஸ்" என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறவனத்தில் மூலம் 'சுபம்' என்ற படத்தை தயாரித்துள்ளார். இப்படம் வருகிற 9-ந் தேதி வெளியாக உள்ளது. தற்போது அந்த படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

சமீபத்தில், விசாகப்பட்டினத்தில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சமந்தா மேடையில் கண்கலங்கியிருந்தார். இதற்கு முன்பும் பல மேடைகளில் இதேபோல் சமந்தா கண்கள் கலங்கிய காட்சிகள் பரபரப்பாக பேசப்பட்டன. இந்தநிலையில் அடிக்கடி இவ்வாறு நடப்பது ஏன் என்பதற்கு சமந்தா விளக்கமளித்துள்ளார்.

அதாவது, "அடிக்கடி நான் மேடையில் கண்கலங்கி துடைப்பதற்கு காரணம் எமோஷனல் கிடையாது. பிரகாசமான விளக்குகளை பார்க்கும்போது என் கண்கள் கூசுவதால், இயற்கையாகவே எனக்கு கண்ணீர் வருகிறது. அதனாலே நான் அடிக்கடி கண்களை துடைக்கிறேன். நான் மேடைகளில் உணர்ச்சி வசப்பட்டு அழவில்லை. நான் அழுவதாக பலர் வதந்திகளை பரப்புகின்றனர். நான் நன்றாகவும், மகிழ்ச்சியாகவும், நலமுடன் உள்ளேன்" என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விளக்கம் கொடுத்துள்ளார்.

 

Read Entire Article