நெல்லையில் 90 கிராம் கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது

5 hours ago 4

திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான பஞ்சாயத்து அலுவலகம் அருகில் உள்ள பேருந்து நிலையம் அருகே இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையிலான காவல் துறையினர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த கே.டி.சி. நகரைச் சேர்ந்த இசக்கிராஜாவை (வயது 35) போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 90 கிராம் கஞ்சா விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மேற்சொன்ன இன்ஸ்பெக்டர், இசக்கிராஜாவை காவல் நிலையம் அழைத்துச் சென்று, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நேற்று முன்தினம் கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து 90 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.

Read Entire Article