விரைவில் 'பணி 2' திரைப்படம்.. ஜோஜு ஜார்ஜ் வெளியிட்ட அறிவிப்பு

3 hours ago 4

சென்னை,

மலையாள சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ஜோஜு ஜார்ஜ் . இவர் தமிழில் 'ஜகமே தந்திரம்' படத்தில் அறிமுகமானவர். கமலின் 'தக் லைப்' படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'ரெட்ரோ' படத்திலும் நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் 7 திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.

இதற்கிடையில் கடந்த நவம்பர் மாதம் இவரே இயக்கி நடித்த 'பணி' என்ற படம் வெளியானது. இதில் நாடோடிகள் அபிநயா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திரில்லர் பாணியில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து பணி 2 மற்றும் பணி 3 என அடுத்தடுத்த பாகத்தினை ஜோஜு ஜார்ஜ் இயக்க உள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், நடிகரும் இயக்குனருமான ஜோஜு ஜார்ஜ் தற்போது பணி 2 படத்தின் அப்டேட் வெளியிட்டுள்ளார். அதாவது, பணி 2 படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கும் என்ற போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் டிசம்பர் மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் முந்தைய பாகத்திற்கு தொடர்பு இல்லாமல். புது கதாப்பாத்திரங்களுடன், புது இடத்தில் நடக்கும் சம்பவத்தை மையமாக வைத்து உருவாக இருக்கிறது.

Read Entire Article