நானியின் ' தி பாரடைஸ்' படத்தில் 2 கதாநாயகிகள்...யாரெல்லாம் தெரியுமா?

8 hours ago 1

சென்னை,

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. இவரது நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் படம் 'ஹிட் 3'. பாக்ஸ் ஆபீஸில் வசூலை குவித்து வரும் இப்படத்தின் புரமோசனுக்காக தற்போது நானி அமெரிக்கா சென்றுள்ளார்.

அங்கிருந்து திரும்பி வந்த பிறகு அவரது அடுத்த படமான 'தி பாரடைஸ்' படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட உள்ளார். சில காலமாகவே இப்படத்தின் கதாநாயகி குறித்து பல வதந்திகள் பரவி வருகின்றன. அதன்படி, சமீபத்திய தகவலின்படி இந்த படத்தில் 2 கதாநாயகிகள் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதில் ஒரு கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டியும் மற்றொரு கதாநாயகியாக கயாடு லோஹரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. பிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்' படத்தின் மூலம் இளைஞர்களின் இதயங்களை கொள்ளையடித்தவர் கயாடு லோஹர்.

Read Entire Article