துருக்கி டிரோன்களை பயன்படுத்தும் பாகிஸ்தான்

10 hours ago 1

லாகூர்,

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், இந்தியா மீது தாக்குதல் நடத்த துருக்கி டிரோன்களை பாகிஸ்தான் பயன்படுத்தியுள்ளது. கடந்த 2 நாட்களாக இந்தியா மீது சுமார் 400 டிரோன்கள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த டிரோன்கள் அனைத்தும் துருக்கியில் தயாரிக்கப்பட்டவையாகும். துப்பாக்கி, வெடி குண்டுகளை சுமந்து சென்று இலக்கை அழிக்கும் வகையிலான அசிஸ் கார்டு சோங்கர் வகை டிரோன்களை பாகிஸ்தானுக்கு துருக்கி வழங்கியுள்ளது. அந்த டிரோன்கள் மூலமே இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.

அதேவேளை, இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் பாகிஸ்தானுக்கு துருக்கு முழு ஆதரவு அளித்து வருகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு துருக்கி எந்தவித இரங்கலோ, வருத்தமோ தெரிவிக்கவில்லை. மேலும், இக்கட்டான சூழ்நிலையில் பாகிஸ்தானுக்கு முழு ஆதரவு அளிப்பதாக துருக்கி தெரிவித்துள்ளது. 

Read Entire Article