நாசரேத்- தூத்துக்குடிக்கு புதிய பேருந்து இயக்கம்

3 hours ago 1

 

நாசரேத், மார்ச் 1: தினகரன் செய்தி எதிரொலியாக நாசரேத்-தூத்துக்குடி இடையே புதிய பஸ் இயக்கப்பட்டு உள்ளதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாசரேத்தில் இருந்து காலை 8.20 மணிக்கு தடம் எண் 146 அரசு புதிய பஸ் புறப்பட்டு நாலுமாவடி, குரும்பூர், ஏரல் வழியாக தூத்துக்குடிக்கு சென்று வருகிறது. இந்த பஸ் அடிக்கடி மாயமாவதோடு புதிய பஸ்சுக்கு பதிலாக பழைய பஸ் இயக்கப்பட்டது. எனவே பொதுமக்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் நலன் கருதி நாசரேத்-தூத்துக்குடி (தடம் எண் 146) இடையே புதிய பஸ் இயக்க வேண்டுமென நேற்று (28ம் தேதி) தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நாசரேத்- தூத்துக்குடி இடையே நேற்று காலையில் புதிய பஸ் இயக்கப்பட்டது. இதனால் நாசரேத் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் புதிய பஸ் இயக்க நடவடிக்கை மேற்கொண்ட அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினகரனுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

The post நாசரேத்- தூத்துக்குடிக்கு புதிய பேருந்து இயக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article