
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பகுதியில் மணல் திருட்டு சம்மந்தமாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் முத்துலாபுரம் ஊரின் அருகே சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நெடுங்குளம், அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கந்தையா (வயது 28), மேலசடையமான்குளம், தெற்கு தெருவை சேர்ந்த கல்யாணசுந்தரம்(18) மற்றும் ஒரு இறஞ்சிறார் சேர்ந்து வந்த டிப்பர் லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் ஆற்று மணலை எந்த ஒரு அனுமதியும் இன்றி சட்ட விரோதமாக அள்ளி கொண்டு வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர், அந்த 3 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கந்தையா, கல்யாணசுந்தரம் ஆகிய 2 பேரையும் கைது செய்து, ஒரு இளஞ்சிறாரை கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்தார். மேலும் அவர்களிடமிருந்து 1 யூனிட் ஆற்று மணலையும், மினி லாரி மற்றும் பைக்கை பறிமுதல் செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுத்தார்.