நாங்கள் போட்ட திட்டமே வேறு... மும்பைக்கு எதிரான வெற்றிக்கு பின் சுப்மன் கில் பேட்டி

1 week ago 5

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 155 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 156 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களம் கண்டது.

குஜராத் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது திடீரென மழை குறுக்கிட்டது. அப்போது குஜராத் 14 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து மழை நின்ற உடன் டக் ஒர்த் லூயிஸ் முறைப்படி 19 ஓவரில் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

வெற்றி பெற கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியில் 19வது ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்த குஜராத் 147 ரன்கள் எடுத்து மும்பையை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் குஜராத் கேப்டன் சுப்மன் கில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

இந்த போட்டியில் பவர்பிளேவிற்கு பிறகு நாங்கள் இலக்கை நோக்கி வேகமாக செல்லலாம் என்று திட்டமிட்டு இருந்தோம். ஆனால், மழை பெய்து போட்டியை டெஸ்ட் போட்டி போன்று கொண்டு சென்றது. பவர் பிளேவிற்கு பிறகு அதிரடியாக ஆடலாம் என்று நாங்கள் நினைத்தபோது மைதானம் ஸ்லோவானது. அதேபோன்று மழையும் வந்தது. அதனால் மழைக்குப் பிறகு இந்த மைதானத்தில் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது.

இருந்தாலும் சரியான நேரத்தில் எங்களுக்கு முமென்ட்டத்தை திருப்ப ஒரு வாய்ப்பு கிடைத்து. அதைவைத்து இறுதி வரை சென்று நாங்கள் கடைசி பந்தில் வெற்றி பெற்றுள்ளோம். இந்த வெற்றிக்கு அணியில் உள்ள அனைவருமே பங்களித்துள்ளனர் என்பதில் மகிழ்ச்சி. இது போன்ற ஒரு வெற்றி கிடைப்பது உண்மையிலேயே சிறப்பான ஒன்று. இவ்வாறு அவர் கூறினார். 

Read Entire Article