
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருக்கிறார். நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டப்பட்ட பின்னரே நான் திருமணம் செய்துகொள்வேன் என்று அறிவித்தார். தற்போது நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்தநிலையில் தனக்கு பெண் பார்த்துவிட்டதாகவும், பேசி முடித்துவிட்டதாகவும் விஷால் தெரிவித்தார். "எப்படி பார்த்தாலும் இன்னும் 4 மாதத்தில் எனக்கு திருமணம் நடக்கும். பெண் பார்த்து விட்டோம். பேசி முடித்துவிட்டோம். காதல் திருமணம் தான். அவர் யார்? அவர் பெயர் என்ன? என்பதை நேரம் வரும்போது சொல்கிறேன். ஒரு மாதமாகத்தான் அந்த பெண்ணை காதலித்து வருகிறேன்'', என்று விஷால் தெரிவித்திருந்தார்.
விஷால் கூறிய அந்த பெண், ஆறு எழுத்து கொண்ட பிரபல 'தன்'மையான நடிகை என்று கூறப்படுகிறது. தஞ்சையை சேர்ந்த அவரைத்தான் கடந்த ஒரு மாதமாக விஷால் காதலித்து வருவதாகவும் பேசப்படுகிறது.
விழுப்புரத்தில் நடந்த மிஸ் கூவாகம் விழாவில் கலந்துகொண்ட விஷால் அங்கு மயக்கம் போட்டு விழுந்தது பரபரப்பானது. அவர் சென்னைக்கு வந்து ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நேரத்திலும் நடிகை அங்கு வந்து விஷாலை கவனித்து கொண்டாராம்.
மூன்றெழுத்து படத்தில் உச்ச நடிகரின் மகளாக நடித்து பேசப்பட்ட நடிகை, கடந்த ஆண்டு வெளியான ஒரு அமானுஷ்ய வெப் தொடரில் நடித்து கவனம் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.