நாகூர் தர்கா கந்தூரி விழா ஏற்பாடுகள் - உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு

2 months ago 12

நாகை,

நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவில் வரும் டிசம்பர் 2-ந்தேதி கந்தூரி விழா நடைபெற உள்ளது. இந்த தர்காவின் சந்தனக்கூடு திருவிழாவிற்காக 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை முன்னிட்டு, தர்கா ஆலோசனைக் குழுவினர் சமீபத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இந்த நிலையில், நாகூர் ஆண்டவர் தர்காவுக்கு இன்று வருகை தந்த உதயநிதி ஸ்டாலின், அங்கு 2 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், குடிநீர், சி.சி.டி.வி., மருத்துவ முகாம்கள், கண்காணிப்பு கோபுரங்கள் என கந்தூரி விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  

Read Entire Article