சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான 'பறந்து போ' படம்

2 hours ago 1

சென்னை,

பிரபல இயக்குனர் ராம் எதார்த்தமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதை வென்றவர். இவர் "கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி" உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

இயக்குனர் ராம் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மிர்ச்சி சிவா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்து வந்தார்கள். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இப்படத்திற்கு யுவன் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஓடிடி உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பெற்றுள்ளது.

முழுக்க காமெடி பின்னணியில் இப்படத்தினை உருவாக்கி வருகிறார் இயக்குனர் ராம். ஒரு பிடிவாதமாக இருக்கும் சிறுவனுக்கும் பணம் கஷ்டத்தில் இருக்கும் அவனது தந்தைக்கும் ஒரு பயணத்தின் போது இருவரும் சந்திக்கும் மனிதர்களின் மூலம் வாழ்க்கையை புரிந்துக் கொள்ளும் சூழல் ஏற்டுகிறது. இதனை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தினை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப படக்குழுவினர் விண்ணப்பித்து வந்தனர். இந்த சூழலில் இப்படம் ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு, அதிகாரபூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நெதர்லாந்து நாட்டில் வருகிற 4-ந் தேதி நடைபெறும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் 'பறந்து போ' படம் திரையிட அதிகாரபூர்வமாக தேர்வாகியுள்ளது. இதற்கு முன்னதாத ராம் இயக்கிய 'பேரன்பு மற்றும் ஏழு கடல் ஏழு மலை' படங்களும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The master craftsman, Director Ram's 'Parandhu Po', selected for the International Film Festival Rotterdam 2025 – #ComingSoon on #DisneyPlusHotstarTamil #DirectorRam @actorshiva @yoursanjali @AjuVarghesee @iamvijayyesudas @thisisysr @madhankarky @dhayaSandy pic.twitter.com/GgmlOoaBxQ

— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) January 31, 2025
Read Entire Article