நாகாலாந்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் அழிப்பு

2 weeks ago 2

நாகாலாந்து,

திமாபூர் மற்றும் மோன் மாவட்டங்களில் நாகாலாந்து காவல்துறையினரால் ரூ.35 கோடிக்கு மேல் மதிப்புள்ள போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அழிக்கப்பட்ட போதைப்பொருட்களில் பிரவுன் சுகர், ஹெராயின், கிரிஸ்டல் மெத், யாபா மாத்திரைகள், இருமல் சிரப் பாட்டில்கள் மற்றும் ஓபியம் ஸ்ட்ரா ஆகியவை அடங்கும். மாவட்ட போதைப்பொருள் ஒழிப்புக் குழு நேற்று ரூ.34.82 கோடி மதிப்புள்ள பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை அழித்துள்ளது.

மேலும் திமாபூர் காவல்துறை ஆணையர் தலைமையிலான குழு ஜனவரி 4 ஆம் தேதி மீட்கப்பட்ட மருந்துகளை சோதனை செய்தனர்.

அதில் 'ஐஸ்' அல்லது 'கிரிஸ்டல் மெத்' என்று அழைக்கப்படும் மெத்தபெட்டமைன், மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஒரு போதைப்பொருள் ஆகும். யாபா மாத்திரைகளிலும் மெத்தபெட்டமைன் உள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read Entire Article