
சென்னை,
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது. நேற்று வேலூர் மாவட்டத்தில் 106 டிகிரி வெப்பம் கொளுத்தியது. 10 நகரங்களில் வெயில் சதம் அடித்தது.
அதன்விவரம்:-
1) வேலூர் - 105.8 டிகிரி (41 செல்சியஸ்)
2) திருத்தணி- 104 டிகிரி (40 செல்சியஸ்)
3) திருச்சி - 103.46 டிகிரி (39.7 செல்சியஸ்)
4) சென்னை மீனம்பாக்கம் - 103.28 டிகிரி (39.6 செல்சியஸ்)
5) மதுரை விமான நிலையம் - 103.1 டிகிரி (39.5 செல்சியஸ்)
6) கரூர் பரமத்தி - 103.1 டிகிரி (39.5 செல்சியஸ்)
7) ஈரோடு - 102.56 டிகிரி (39.2 செல்சியஸ்)
8) கடலூர் - 101.84 டிகிரி (38.8 செல்சியஸ்)
9) மதுரை நகரம் - 101.48 டிகிரி (38.6 செல்சியஸ்)
10) சேலம் - 101.48 டிகிரி டிகிரி (38.6 செல்சியஸ்)
இந்த சூழலில், கோடை வெயில் எந்த அளவுக்கு சுட்டெரிக்குமே, அதே அளவுக்கு வரும் நாட்களில் தமிழகத்தில் பரவலாக கோடை மழை தீவிரமாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், நெல்லை, தென்காசி உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் வருகிற 10-ந்தேதி வரையில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.