
மும்பை,
மராட்டியத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசி வருகிறது. வெயில் தாக்கத்தால் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். நேற்று முன்தினம் நாட்டிலேயே அதிகபட்சமாக அகோலாவில் 112.82 டிகிரி வெப்ப நிலை பதிவானது.
இதேபோல சோலாப்பூரில் 112.46 டிகிரியும், பர்பானியில் 111.38 டிகிரியும் வெப்பநிலை பதிவாகி இருந்தது. இதுதவிர அமராவதி, நந்துா்பர் பகுதிகளிலும் 110 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகியது. மும்பையில் நகர்பகுதியில் 93.56 டிகிரியும், புறநகர் பகுதிகளில் 93.92 டிகிரி வெயிலும் பதிவாகி இருந்தது.