நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஒளவையார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

2 months ago 7

நாகப்பட்டினம்,நவ.28: ஔவையார் விருது பெற நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.ஔவையார் விருது சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம். மொழித்தொண்டு, கலை, அறிவியல் பண்பாடு. கலாச்சாரம். பத்திரிக்கை. நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்கும் மகளிருக்கு சர்வதேச மகளிர் தினமான மார்ச் மாதம் 8 ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் முதல்வரால் வழங்கப்பட்டு வருகின்றது.

இவ்விருது பெறுபவருக்கு ரூ.1.50 லட்சத்திற்கான காசோலை, பொன்னாடை மற்றும் சான்றிதழ் தமிழ்நாட்டை சேர்ந்த பெண்ணிற்கு வழங்கப்படும். இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் தமிழக அரசின் விருதுகள் இணையத்தளத்தில் hittps://awards.tn.gov.in வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பித்து அதன் நகலினை நாகப்பட்டினம் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல் பெற மாவட்ட சமூகநல அலுவலகம் மற்றும் தொலைபேசி எண் 9150057450 தொடர்பு கொள்ளவும் என தெரிவித்துள்ளார்.

The post நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஒளவையார் விருது பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Read Entire Article