நாகப்பட்டினம் நகரில் 100 ஆண்டு பழமை வாய்ந்த சின்ன ஆஸ்பத்திரி பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி

1 month ago 14

நாகப்பட்டினம்,செப்.30: நாகப்பட்டினம் நகரில் 100 ஆண்டுகள் கடந்த பழமை வாய்ந்த சின்ன ஆஸ்பத்திரியை பழமை மாறாமல் புதுபிக்கும் பணியை நகராட்சி தொடங்கியது. நாகப்பட்டினம் நீலா தெற்கு வீதியில் சின்ன ஆஸ்பத்திரி என அழைக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன்களை பாதுகாத்த ஆஸ்பத்திரி கடந்த 1909ம் ஆண்டு சுப்பிரமணியம் பிள்ளை என்பவரால் கட்டப்பட்டது. இந்த ஆஸ்பத்திரி நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த ஏழை, எளிய பொதுமக்கள் சிகிச்சை பெற்று வந்தனர். கீழதஞ்சை மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் நாகப்பட்டினம் இருந்த போது இந்த சின்ன ஆஸ்பத்திரியில் ஏராளமான சுய பிரசவங்களை இங்கு பணியாற்றிய டாக்டர் குழுவினர் செய்து சாதனை படைத்துள்ளனர்.

இவ்வாறு புகழ் பெற்று திகழ்ந்த சின்ன ஆஸ்பத்திரியில் காலபோக்கில் டாக்டர்கள் பற்றாக்குறையால் ஆஸ்பத்திரியில் நோயாளிகள் வருகை குறைந்தது. இதன் பின்னர் தொடர்ச்சியாக ஆஸ்பத்திரி மூடப்பட்டது. இதனால் இந்த ஆஸ்பத்திரி பராமரிப்பு இல்லாமல் போனதால் கட்டிடங்கள் சேதம் அடைந்து மரம் முளைக்க தொடங்கியது. இவ்வாறு பழைமை வாய்ந்த இந்த கட்டிடத்தை புதுபிக்க வேண்டும் என நாகப்பட்டினம் பொதுமக்கள் கலெக்டர் ஆகாஷ்க்கு கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து 100 ஆண்டுகள் கடந்த அந்த கட்டித்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு கலெக்டர் ஆய்வு நடத்தினார். இதை தொடர்ந்து பழைமை மாறாமல் புதுபிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நாகப்பட்டினம் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, நகர்மன்ற ஆணையர் லீனாசைமன் ஆகியோர் ஆய்வுகள் நடத்தினர். பழைமை மாறாமல் புதுபிக்க ரூ.7 லட்சம் நிதியை நாகப்பட்டினம்நகராட்சி ஒதுக்கீடு செய்தது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து ஆகியோர் பூமிபூஜை போட்டு பணிகளை தொடங்கி வைத்தனர். பழமை மாறாமல் பணிகளை விரைந்து முடிக்க தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் உத்தரவிட்டார்.

The post நாகப்பட்டினம் நகரில் 100 ஆண்டு பழமை வாய்ந்த சின்ன ஆஸ்பத்திரி பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி appeared first on Dinakaran.

Read Entire Article