தங்கம் விலை மேலும் அதிகரிப்பு பவுன் ரூ.72 ஆயிரத்தை நெருங்கியது: நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி

5 hours ago 1

சென்னை: தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.360 உயர்ந்தது. அதே நேரத்தில் பவுன் மீண்டும் ரூ.72 ஆயிரத்தை நெருங்கியதால் நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தங்கம் விலை கடந்த மாதம் அதிரடியாக உயர்ந்து வந்தது. இதன் ஒரு பகுதியாக, கடந்த மாதம் 22ம் தேதி பவுனுக்கு ரூ.2,200 உயர்ந்து ஒரு பவுன் ரூ.74,320க்கு விற்றது. இது தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய உச்சமாகும். அதன் பிறகு தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வார தொடக்க நாளான கடந்த 19ம் தேதி தங்கம் விலையில் மாற்றம் காணப்பட்டது. அன்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,755க்கும், பவுனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு பவுன் ரூ.70,040க்கும் விற்பனையானது. தொடர்ந்து 20ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.360 குறைந்து ஒரு பவுன் ரூ.69,680க்கு விற்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது.

தங்கம் விலை பவுனுக்கு அதிரடியாக ரூ.1,760 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.71,440க்கு விற்பனையானது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் நேற்று தங்கம் விலை மேலும் உயர்வை சந்தித்தது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,975க்கும், பவுனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு பவுன் ரூ.71,800க்கும் விற்பனையானது.

தங்கம் விலை பவுன் மீண்டும் ரூ.72 ஆயிரத்தை நெருங்கியுள்ளது நகை வாங்குவோருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே போல வெள்ளி விலையும் நேற்று உயர்ந்திருந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.112க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.

The post தங்கம் விலை மேலும் அதிகரிப்பு பவுன் ரூ.72 ஆயிரத்தை நெருங்கியது: நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article