நாகப்பட்டினம், சிதம்பரம் வரை நீட்டிக்க பயணிகள் கோரிக்கை வேலூர்- செய்யாறு- புதுச்சேரி பேருந்துகளை

2 hours ago 3

செய்யாறு, மே 23: தமிழ்நாடு அரசு போத்துவரத்துக்கழகம் விழுப்புரம் கோட்டம் வேலூர் மண்டலம் கொண்வட்டம் பணிமனையில் இருந்து தடம் எண்.209 வேலூர் – செய்யாறு – புதுச்சேரி என இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்து மாலை நேரத்தில் வேலூரில் இருந்து திருத்தணிக்கு ஒரு நடை இயக்கப்படுகிறது. வேலூரில் இருந்து திருத்தணிக்கு நிறைய அரசுப் பேருநதுகள் இயக்கப்படுகின்றன. தொலைத் தூரம் செல்லும் ஒரேயொரு பஸ் கூட இல்லாத நிலைமையில் இருந்து வரும் ஆற்காடு, செய்யாறு பகுதிகளைச் சேர்ந்த பொது மக்கள், வியாபாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பயன் பெறும் வகையில் இந்த பேருந்தை புதுச்சேரி, சிதம்பரம் வழியாக நாகப்பட்டினத்திற்கு இயக்கி உதவிட வேண்டும்.
அதேப்போல் குடியாத்தம் பணிமனையில் இருந்து இயக்கப்படும் தடம் எண்.205 குடியாத்தம், வேலூர், செய்யாறு, புதுச்சேரி வரையில் அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து மதியம் நேரத்தில் புதுச்சேரி – திண்டிவனம், திண்டிவனம் – புதுச்சேரி என இரு நடைகள் இயக்கப்படுகிறது.

தொலைத் தூரம் செல்லும் ஒரேயொரு பஸ் கூட இல்லாத நிலைமையில் இருந்து வரும் ஆற்காடு, செய்யாறு பகுதிகளைச் சேர்ந்த பொது மக்கள், வியாபாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பயன் பெறும் வகையில் இந்த பேருந்தை புதுச்சேரியில் இருந்து கடலூர் வழியாக சிதம்பரத்திற்கு இயக்கிட பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். வேலூர் – திண்டிவனம் மார்க்த்தில் பஸ் வசதி வேலூர் மண்டலத்தில் இருந்து வேலூர் அல்லது சோளிங்கர் பகுதியில் இருந்து ஆற்காடு, செய்யாறு, வந்தவாசி வழியாக திண்டிவனத்திற்கு 2, 3 அரசு பஸ்களை நேரடியாக சென்று வரும் வகையில் (கட் சர்வீஸ் இல்லாத வகையில்) இயக்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் ஆற்காடு, செய்யாறு பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் ஆன்மீகத் தலங்களான நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற பல பகுதிகளுக்கு செல்லும் வகையிலும், தென்மாவட்டப் பகுதிகளுக்கு செல்லும் தொலைத்தூர பஸ்களை பிடிக்க வசதியாகவும், காலை நேரத்தைத் தவிர்த்து மற்ற நேரங்களில் திண்டிவனம் வரையில் செல்ல வசதியாக வேலூர் அல்லது சோளிங்கர் பகுதியில் இருந்து ஆற்காடு, செய்யாறு, வந்தவாசி வழியாக திண்டிவனத்திற்கு 2, 3 அரசு பஸ்களை நேரடியாக இயக்கிட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

The post நாகப்பட்டினம், சிதம்பரம் வரை நீட்டிக்க பயணிகள் கோரிக்கை வேலூர்- செய்யாறு- புதுச்சேரி பேருந்துகளை appeared first on Dinakaran.

Read Entire Article