நாகப்பட்டினத்தில் பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சார பேரணி: கலெக்டர் தொடங்கி வைத்தார்

3 weeks ago 5

நாகப்பட்டினம்,டிச.25: நாகப்பட்டினத்தில் பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சார பேரணியை கலெக்டர் ஆகாஷ் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தேசிய அளவிலான பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சார பேரணி நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ஆகாஷ் பேரணியை தொடங்கி வைத்தார். மகளிர் சுய உதவிக்குழுவினர் பாலின வன்முறைக்கு எதிரான வாசகங்களான குழந்தை திருமணத்தை ஒழிப்போம், குடும்ப வன்முறையை தடுப்போம், குழந்தை தொழிலாளர் முறையை தடுப்போம், பெண் கல்வியை ஊக்குவிப்போம்.

பாலின வன்முறைக்கு எதிராக குரல் எழுப்புவோம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை கையில் ஏந்தியும் முழக்கமிட்டும் சென்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று இறுதியில் நாகப்பட்டினம் ஆர்டிஓ அலுவலகத்தை சென்றடைந்தனர். இதை தொடர்ந்து பாலின சமத்துவ உறுதிமொழியான ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் எத்தகைய பாகுபாடும்மின்றி சமமாக வளர்போம் என பாலின வன்கொடுமைக்கு எதிரான பிரச்சார உறுதி மொழியை கலெக்டர் ஆகாஷ் தலைமையில் அனைவரும் எடுத்துக்கொண்டனர். தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் கூடுதல் இயக்குநர் முத்துமீனா, மகளிர் திட்ட இயக்குநர் முருகேசன், உதவி திட்ட அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post நாகப்பட்டினத்தில் பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சார பேரணி: கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Read Entire Article