நாக சைதன்யா நடித்துள்ள 'தண்டேல்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

2 months ago 13

சென்னை,

தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யா தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி இருவரும் இணைந்து தற்போது 'தண்டேல்' படத்தில் நடித்து முடித்துள்ளனர். 'கார்த்திகேயா 2' திரைப்படத்தின் மூலம் பிரபலமான சந்து மொண்டேட்டி இப்படத்தை இயக்குகிறார். கீதா ஆர்ட்ஸ் சார்பில் பன்னி வாஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

சேகர் மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரியும்நிலையில், இப்படத்தின் சிறப்பு பாடலுக்கான படப்பிடிப்பு 1,000 நடனக் கலைஞர்களுடன் மிக பிரமாண்டமாக நடந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீகாகுளத்தில் உள்ள மீனவர்களின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது.

இந்தநிலையில் தற்போது, இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, தண்டேல் திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Read Entire Article