நவம்பர் மாத ராசிபலன் - மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்

2 months ago 13

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே..

தங்கள் செல்வாக்கை வெளிகாட்டிக் கொள்ளாதவர் நீங்கள். மிகவும் எளிமையானவர்.

சிறப்பு பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு உத்யோகத்தில் தங்கள் வேலையில் சிறு சிக்கல்கள் ஏற்படும். அதனை அழகாக செய்து முடித்து தாங்கள் தங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. ஏனெனில் கடன் கொடுத்து விட்டு பின்பு வருந்துவதை விட கொடுப்பதை தவிர்க்கலாம்.

குடும்பத்தலைவிகளை பொருத்தவரை கணவனுடன் இணைந்து செயல்பட்டு குடும்ப நலனுக்கு பாடுபடுவர். இந்த கால கட்டத்தில் தங்களுக்கு பணப்பற்றாக்குறை ஏற்படும். ஆதலால், சிக்கன நடவடிக்கையை எடுப்பீர்கள்.

கலைஞர்களுக்கு தங்கள் திறமையை அதிகரிக்க ஒரு சிலர் கூத்துப் பட்டரையில் சேருவீர்கள். தாங்கள் நினைத்த கதாபாத்திரமும் கிடைக்கும்.

அரசு தேர்வு எழுதும் மாணவர்கள் படிப்பில் கவனமுடன் படித்து எழுதி பார்ப்பது மிக நல்லது. நேரத்தை வீணடிக்காமல் படிப்பது தேர்வு சமயத்தில் மிகவும் சுலபமாக இருக்கும்.

பரிகாரம்

முருகருக்கு சிவப்பு மலரால் மாலையோ அல்லது பூச்சரமோ அணிவித்து வழிபடவும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே,

பெற்றோர்களைப் போல நண்பர்களையும் நினைக்கும் அன்பு மிக்கவர் நீங்கள். ஒருபோதும் நண்பர்களுக்கு துரோகம் செய்யாத பண்பாளர்.

சிறப்புப் பலன்கள்

உத்தியோகஸ்தர்களுக்கு சம்பளம் சரிவர வராமல், அதாவது காலம் தாழ்த்தி வந்த சம்பளம் இனி மாத ஆரம்பத்திலேயே கிடைக்கும்.

வியாபாரிகள் தேவையற்ற காலவிரயத்தை தவிர்க்கவும். காரணம் தங்களுக்கு அடிக்கடி மறதி வந்து போகும். தங்கள் வேலைகளை டைரியில் எழுதி வைத்துக் கொண்டு திடடமிட்டு செயல்படுங்கள்.

குடும்பத் தலைவிகள் தாங்கள் எதிர்பார்த்தவாறு இதுவரை சேர்த்து வைத்த பணம் அல்லது சீட்டு தொகையில் தங்களுக்கு புதிய நகை வாங்குவீர்கள். வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை.

திரைக்கலைஞர்களைப் பொருத்தவரை ஒரு சிலர் தாங்கள் திரைப்படத்தில் சேருவதற்காக ஒரு தொகையை தயாரிப்பாளருக்கு தர முடிவெடுப்பீர்கள். இருப்பினும் அந்த திரைப்பட பேனரை பற்றி நன்கு ஆராய்ந்து செய்வது நல்லது.

ஐ.ஏ.எஸ். போன்ற குடிமைப் பணிகளுக்காக முயற்சிக்கும் மாணவர்கள் தற்போதிலிருந்தே பொது அறிவு விசயங்களை தெரிந்து கொள்வது நல்லது. மாணவர்கள் அதற்குண்டான குரூப்பை தேர்வு செய்வது நல்லது.

பரிகாரம்

அங்காள அம்மனுக்கு முல்லை பூச்சரம் கொடுத்து கும்பிடவும்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே..

எவருடைய சிபாரிசும் இன்றி தங்கள் தனித்திறமையால் முன்னேறிக் கொண்டடிருப்பவர் நீங்கள். எந்த பிரச்சினை வந்தாலும் நேருக்கு நேர் நின்று சமாளிப்பவர்.

சிறப்புப் பலன்கள்

மார்க்கெட்டிங் பிரிவில் வேலை செய்யும் உத்யோகஸ்தர்களுக்கு நீண்ட நாட்களாக தாங்கள் கேட்ட சில முக்கியமான சலுகைகள் கிடைக்கும். கவலை வேண்டாம். இந்த மாதம் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.

வியாபாரிகள் தங்கள் கொள்முதலை பெருக்குவீர்கள். சேமிப்பும் கூடும். மளிகைக் கடை வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு லாபம் உயரும்.

குடும்பத் தலைவிகளுக்கு பணம் தேவைக்கேற்ப கிடைக்கும். மாமியார் மருமகள் உறவு நன்றாக இருக்கும். உறவினர், விருந்தினர் வருகை ஏற்பட்டு மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த மாதம் உங்கள் கனவு பலிக்கும்.

திரைத்துறை கலைஞர்களுக்கு வெளிமாநிலத்தில் இருந்து வேற்று மொழிகளில் நடிக்க அழைப்பு வரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது முழுமையாக கவனமாகப் படித்துவிட்டு கையெழுத்திடுவது நல்லது.

மாணவர்களுக்கு சோம்பேறித்தனம் குடிகொள்ளும். ஆதலால், மனதை ஒருமுகப்படுத்தி படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய மாதம் இது.

பரிகாரம்

பெருமாளை புதன் கிழமை அன்று தரிசிப்பது நல்லது.

கடகம்

கடக ராசி அன்பர்களே..

எந்த விசயத்திலும் அவசரம் காட்டாமல் பொறுமையை கடைப்பிடிப்பவர் நீங்கள். கோபத்தை குறைத்து விவேகத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்.

சிறப்புப் பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் சக ஊழியர்கள் தங்கள் வேலையை பகிர்ந்து கொண்டு தங்களின் பேரன்பை பெறுவர். குடும்பமாக பழகுவார்கள்.

வியாபாரம் செய்யும் இளைஞர்களுக்கு அடிக்கடி குறுகிய தூர பயணங்களை மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலை வரும். முதலில் செலவுகள் அதிகமாக இருந்தாலும் தங்களுக்கு இனி வருங்காலத்தில் அது ஒரு அடித்தளமாக அமைந்துவிடும்.

குடும்பத் தலைவிகளுக்கு பலகாலமாக கற்பனை செய்து வைத்துக்கொண்டிருந்த வீடு கட்டும் பணி நிறைவேறும். தங்கள் கணவரின் அன்பைப் பரிபூரணமாகப் பெற்று மனமகிழ்வு கொள்வார்கள்.

கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புக்கான மாதம் இது. பல காலமாக தாங்கள் பட வாய்ப்புக்காக அலைந்து திரிந்தீர்கள். அதன் வெளிப்பாடு தங்களுக்கு நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும்

மாணவ,மாணவிகள் தங்களது சக மாணவர்களுடன் இணக்கமாக செல்வது நல்லது. தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

பரிகாரம்

திருவேற்காடு கருமாரியம்மனை வெள்ளிக் கிழமை அன்று தரிசிப்பது நல்லது.

கணித்தவர்:

திருமதி. N.ஞானரதம்

Cell 9381090389

Read Entire Article