நவம்பர் மாத ராசிபலன் - சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்

2 months ago 14

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே..

எல்லாம் தெரிந்தாலும் எதுவுமே தெரியாதவர் போல் முகபாவனை செய்யும் குணமிக்கவர். ரகசியத்தை பாதுகாப்பவர் நீங்கள்.

சிறப்புப் பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு தங்கள் குடும்ப வருவாய் பெருகும் காலமிது. தாங்கள் நினைத்தவாறே விரும்பிய இடத்தில் தங்களுக்கு இடமாற்றத்துடன் சம்பள உயர்வும் கிடைக்கும்.

வியாபாரிகள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவேண்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கோபப்படாதீர்கள். கோபப்பட்டால் தங்களின் உடல் நலம்தான் கெடும் என்பதை உணருங்கள்.

குடும்பத் தலைவிகள் செலவு செய்யும்போது கவனமாக செய்து, அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்துக் கொள்ளுங்கள். உங்கள் மதிப்பு உயரும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் சில விசயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

கலைஞர்களில் நடனத்துறையில் இருப்பவர்களுக்கு போதிய பயிற்சி இன்மை காரணமாக பட வாய்ப்புகள் தாமதமாகலாம். வாய்ப்பு கிடைக்காமலும் போகலாம். ஆதலால், அதற்குண்டான பயிற்சியில் ஈடுபடுவது நல்லது.

மாணவர்கள் அன்றைய பாடங்களை அன்றே ஒருமுறையாவது படித்துவிடுவது நல்லது.

பரிகாரம்

சிவ பெருமானை ஞாயிற்றுக்கிழமை அன்று ராகுகாலத்தில் தரிசிப்பது நல்லது.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே..

தான் கோபப்பட்டால் தனக்குத் தான் நஷ்டம் என்பதை அறிந்து நடப்பவர் நீங்கள். பொறுமையை கையாண்டு நினைத்த இலக்கை அடைபவர்.

சிறப்புப் பலன்கள்

வேலைக்குச் செல்லும் உத்யோகஸ்தர்களுக்கு தங்கள் மேலதிகாரிகளின் அன்பை பெற தாங்கள் குறித்த நேரத்தில் உங்கள் பணிகளை முடித்துக் காட்டவேண்டியது அவசியம்.

வியாபாரிகள் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் தங்களின் வியாபாரத்தை விரிவு செய்வதற்காக பயணங்கள் மேற்கொள்வர். தங்கள் வியாபாரம் மற்ற ஊர்களிலும் செழித்து வளர இந்த பயணங்கள் சாதகமாக இருக்கும்.

குடும்பத்தலைவிகளில், தங்கள் உழைப்பிற்கு வீட்டில் அங்கீகாரம் தரவில்லையே என்று ஏங்கியவர்களுக்கு இனி வீட்டில் மதிப்பு அளிப்பர். கணவரது தேவையை பூர்த்தி செய்வீர்கள்.

கலைஞர்கள் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லையே என்று ஏங்கியவர்கள் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை ஏற்று நடியுங்கள். பின்பு அதுவே, பெரிய வாய்ப்பினைப் பெற்றுத் தரும்.

மாணவர்கள் தங்கள் சக மாணவர்களுடன் விடுமுறையில் வெளியூர் செல்ல சிறுகச் சிறுக சேர்த்து வைப்பீர்கள். படிப்பிலும் கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள்.

பரிகாரம்

அம்மனுக்கு வெள்ளிக்கிழமை அன்று மல்லிகை பூச்சரத்தை சாற்றி தரிசிப்பது நல்லது.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே..

யார் யாரை எவ்விதத்தில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதை அறிந்தவர் நீங்கள். சிறு துரும்பும் பல்குத்த உதவும் என்பதனை உணர்ந்தவர்.

சிறப்புப்பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு சக பணியாளர்களிடம் அனுசரித்துச் செல்வதாலும் மற்றும் தங்கள் கடமையை சரிவர செய்வதாலும் தங்கள் மேலதிகாரிகள் தங்களிடம் நெருக்கமாவர்.

வெளிநாட்டு வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்ய அதிகமான ஆர்டர்கள் கிடைக்கும். அதனை குறித்த நேரத்தில் தாங்கள் அனுப்பி வைத்துவிடுவீர்கள்.

குடும்பத் தலைவிகள் சுய உதவி குழுவில் இணைவதற்கான வாய்ப்பு உள்ளது. சுய உதவிக்குழுவில் புதிய சலுகைகளை பெறுவீர்கள். வீட்டினை கலைப் பொருட்களை கொண்டு அலங்கரிப்பீர்கள்.

கலைஞர்களுக்கு லொகேஷன் பார்ப்பதற்காக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். கதாபாத்திரம் தேர்வு செய்வதும் இந்த மாதம் நடைபெறும்.

மாணவர்கள் எப்போதும் தாங்கள் எதிர்பாலினருடன் அதிக நெருக்கமாக பழக வேண்டாம். அது தங்களை பாதிக்கலாம். ஆதலால், தங்கள் எதிர்கால இலக்கை மட்டும் கவனத்தில் வைத்துக் கொள்வது நல்லது.

பரிகாரம்

ராகு பகவானுக்கு ராகு காலத்தில் வெள்ளிக் கிழமை அன்று பால், முட்டை வைத்து வழிபடுவது நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே...

உங்களை பார்த்ததுமே மற்றவர்களுக்கு நெடுநாள் பழகிய உணர்வு ஏற்படும். அந்த அளவிற்கு ஜன வசியம் மிக்கவர் நீங்கள்.

சிறப்புப்பலன்கள்

உத்யோகஸ்தர்களைப் பொருத்தவரை, கடுமையான வேலையையும் தாங்கள் கண்சிமிட்டும் நேரத்தில் செய்து முடிப்பதால் தங்களுக்கு நற்பெயர் ஏற்படும். தங்கள் வேலையை தக்க வைத்துக் கொள்ளவும் அது வழிவகுக்கும்.

வியாபாரிகள் தாங்கள் செல்லும் ஊர்களில் தாங்கள் கவனக்குறைவாக இருக்காமல் தங்கள் உடைமைகளை பாதுகாப்புடன் எடுத்துச் செல்வது நல்லது.

குடும்பத் தலைவிகள் தங்களின் பிள்ளையின் நலனில் அக்கறை காட்டி அவர்களின் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல பாடுபடுவீர்கள். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கலைஞர்களுக்கு பொதுவாக இந்த மாதம் சாதகமாக இருக்கும். கலைத்துறையினர் என்றால் சினிமா மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் மட்டுமின்றி மேக்கப் மேன், காஸ்ட்யூம் டிசைனர், டான்ஸ்மாஸ்டர் மற்றும் கேமரா மேன் போன்றவர்களும் அடங்குவர். அவர்களுக்கு இந்த மாதம் பணவரவுக்கு தடையில்லாமல் அமையும்.

மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற வேண்டுமானால் வீட்டில் அடிக்கடி எழுதி பார்ப்பது நல்லது. நன்கு படித்து இவ்வாறு எழுதி பார்த்தால் பெரிய அளவில் முன்னேற்றம் கிடைக்கும்.

பரிகாரம்

பைரவருக்கு செவ்வாய்க் கிழமை அன்று அவரது பாதத்தில் மிளகு வைத்து வழிபடுவது நல்லது. 

கணித்தவர்:

திருமதி. N.ஞானரதம்

Cell 9381090389

Read Entire Article