நரசிம்ம பிரம்மோற்சவம்: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் தேரோட்டம்

8 hours ago 1

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்ம பிரம்மோற்சவம் கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் வாகன சேவைகள் நடைபெறுகின்றன. 6-ம் தேதி முக்கிய நிகழ்வான கருட சேவை நடைபெற்றது. அதன்பின்னர் சூரிய பிரபை, சந்திர பிரபை வாகன சேவைகள் நடைபெற்றன. 8-ந்தேதி காலை 5.30 மணிக்கு பல்லக்கு நாச்சியார் திருக்கோலம், மாலை 4 மணிக்கு யோக நரசிம்மர் கோலத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். மாட வீதிகளில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள், திருத்தேரில் வலம் வந்த பகவானை தரிசனம் செய்தனர்.

வருகிற 13-ந்தேதி சப்தாவர்ணம் எனும் சிறிய திருத்தேர் நிகழ்வுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

Read Entire Article