நண்பரின் மனைவியுடன் வாலிபர் உல்லாசம்... அடுத்து நடந்த கொடூர சம்பவம்

11 hours ago 3

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் கமலாப்புரா தாலுகா நரோனா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட முரடி கிராமத்தை சேர்ந்தவர் அம்பரீஷ் (வயது 28). இதே பகுதியை சேர்ந்தவர் அஜய் (29). தொழிலாளி. இவர்கள் 2 பேரும் நண்பர்கள். இவர்கள் 2 பேருக்கும் திருமணம் முடிந்து மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் அம்பரீஷ், அடிக்கடி அஜயின் வீட்டிற்கு சென்று வந்தார்.

அப்போது அஜயின் மனைவியுடன் அம்பரீசுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அஜய் இல்லாதபோது வீட்டுக்கு சென்ற அம்பரீஷ் நண்பரின் மனைவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதை அறிந்த அஜய், அம்பரீசை கண்டித்தார். ஆனால் அவர் கேட்கவில்லை. இதையடுத்து தனது மற்றொரு நண்பருடன் சேர்ந்து அம்பரீசை கொலை செய்ய அஜய் திட்டமிட்டார்.

அதன்படி சம்பவத்தன்று இரவு தனியாக பேசவேண்டும் என்று கூறி அஜய், அம்பரீசை, முரடி கிராமம் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து அஜய், தனது மனைவியுடனான கள்ளத்தொடர்பை கைவிடும்படி கூறி தகராறு செய்துள்ளார். மேலும் அஜய், தனது நண்பருடன் சேர்ந்து, அம்பரீசை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

பின்னர் இதுகுறித்து நரோனா போலீசாருக்கு அஜயே தகவல் அளித்தார். அந்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றனர். அவர்களிடம் அஜய் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கொலையான அம்பரீசின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாா் நடத்திய விசாரணையில் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் அம்பரீசை கொன்றதாக அஜய் வாக்குமூலம் அளித்தார். இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த அஜயின் நண்பர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article