
மும்பை,
இந்திய மகளிர் 'ஏ' கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களிலும், ஒரு 4 நாள் போட்டியிலும் (மல்டி டே போட்டி) விளையாட உள்ளது. அதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ராதா யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி விவரம் பின்வருமாறு:
டி20 அணி: ராதா யாதவ் (கேப்டன்), மின்னு மணி, ஷபாலி வர்மா, டி. விருந்தா, சஜனா சஜீவன், உமா சேத்ரி, ரக்வி பிஸ்ட், ஸ்ரேயங்கா பாட்டீல், பிரேமா ராவத், நந்தினி காஷ்யப், தனுஜா கன்வர், ஜோஷிதா வி.ஜே, ஷப்னம் ஷகீல், சைமா தாகூர், டைட்டஸ் சாது
ஒருநாள் மற்றும் மல்டி டே அணி: ராதா யாதவ் (கேப்டன்), மின்னு மணி , ஷபாலி வர்மா, தேஜல் ஹசாப்னிஸ், ரக்வி பிஸ்ட், தனுஸ்ரீ சர்க்கார், உமா சேத்ரி, பிரியா மிஸ்ரா, தனுஜா கன்வர், நந்தினி காஷ்யப், தாரா குஜ்ஜார், ஜோஷிதா வி.ஜே., ஷப்னம் சாகீல், சப்தா விஜே, சைமா தாகூர், டைட்டஸ் சாது