
சென்னை,
நடிகை ஷாலினி முதல் முறையாக 4 வயதில் மலையாளத்தில் வெளியான 'என்டே மாமாட்டிக்குட்டியம்மாக்கு' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரள அரசின் விருதை பெற்றார். அதைத் தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பல படத்தில் நடித்து பெயர் எடுத்தார். மற்ற மொழிகளில் ஏராளமான படத்தில் நடித்தாலும், பாலிவுட்டில் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்தார். அனில் கபூரின் ரக்வாலா என்ற படத்தில் ஷபானா ஆஸ்மிக்கு மகளாக நடித்தார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி படங்களில் நடிப்பதில்லை.
தமிழில் காதலுக்கு மரியாதை என்று இவர் நடித்த முதல் படத்திலேயே தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்துக் கொண்டார். அதை தொடர்ந்து, பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமானார். 1999ம் ஆண்டு அஜித்துடன் அமர்க்களம் படத்தில் ஜோடியாக சேர்ந்து நடித்து அதன் மூலம் காதல் ஏற்பட இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி இருக்கும் ஷாலினி சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, கடைசியாக சினிமாவில் படம் நடிக்கும் போதே நடிகை ஷாலினி ரூ. 50 லட்சம் வரை சம்பளம் வாங்கினாராம். அப்படி டாப் நாயகியாக வலம் வந்த நடிகை ஷாலினியின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 50 கோடிக்கு இருக்கும் என கூறப்படுகிறது. நடிகை ஷாலினியின் கணவர் அஜித்தின் சொத்து மதிப்பு ரூ. 200 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. மத்திய அரசு 2025 ஆம் ஆண்டுக்கான கலைத்துறையில் சிறந்து விளங்கிய நடிகர் அஜித்துக்கு பத்ம விருது வழங்கி கவுரவித்தது. இந்த விருதை அஜித் தனது மகன், மகளும், மனைவி ஷாலினியுடன் சென்று பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.