ஐ.பி.எல்.2025: லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சு தேர்வு

3 hours ago 2

அகமதாபாத்,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 64-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் அணி அதனை தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கும். அதேவேளை ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட லக்னோ அணி ஆறுதல் வெற்றிக்காக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி லக்னோ முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:-

குஜராத் டைட்டன்ஸ்: சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஷெர்பேன் ரூதர்போர்ட், ஷாருக் கான், ராகுல் தெவட்டியா, ரஷித் கான், அர்ஷத் கான், சாய் கிஷோர், ககிசோ ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்: மிட்செல் மார்ஷ், மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, அப்துல் சமத், ஹிம்மத் சிங், ஷபாஸ் அகமது, ஆகாஷ் தீப், அவேஷ் கான், வில்லியம் ஓரூர்க்.

Read Entire Article