நடிகை அனுபமாவின் 'பரதா' பட டீசர் வெளியீடு

4 hours ago 1

சென்னை,

'பிரேமம்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். அப்படத்தின் இமாலய வெற்றியின் மூலம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடிக்க துவங்கினார். தமிழில் தனுஷ் உடன் 'கொடி' படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில், 'கார்த்திகேயா - 2' , '18 பேஜஸ்', 'டில்லு ஸ்கொயர்' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இப்படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றதால் அனுபமா தன் சம்பளத்தை ரூ.50 லட்சத்திலிருந்து ரூ.1.20 கோடியாக உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது இவர் 'பரதா' என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனந்தா மீடியா பேனரில் விஜய் டான்கடா, ஸ்ரீனிவாசலு, ஸ்ரீதர் மகுவா ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். பிரவீன் கந்த்ரேகுலா இந்தப் படத்தினை இயக்குகிறார். இந்தப் படத்தில் இசையமைப்பில் கோபி சுந்தரும், மிருதுல் சுஜித் சென் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரில் இரண்டு பெண்களுடன் பயணிக்கும் கிராமத்தியப் பெண்ணின் சாகசப் பயணத்தோடு கதை நகர்வதுபோல் உள்ளது. கிராமங்களில் பெண்கள் பரதா அணிவது, அவர்களை அடிமைகளாக சித்திரிக்க ஆண்கள் கொண்டுவந்த வழக்கம் என்று கூறப்படுகிறது. பரதா படத்திலும் பரதா அணிவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் பெண்களின் நிலையை கதைக்கருவாகக் கொண்டு கதை நகர்கிறது.

தெலுங்கு, தமிழ், மலையாளம் மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

Thank you @dulQuer garu for launching our #ParadhaTeaser ✨We're truly overwhelmed by your words of encouragement!▶️ https://t.co/XvcwuqRA3O#Paradha @anupamahere @darshanarajend @sangithakrish @AnandaMediaOffl @praveenfilms @VijayDonkada @GopiSundarOffl @DQsWayfarerFilm pic.twitter.com/I4T5rTxWiZ

— Ananda Media (@AnandaMediaOffl) January 23, 2025
Read Entire Article