கோலாலம்பூர்,
2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆன இந்திய அணி தனது 3-வது லீக் ஆட்டத்தில் இலங்கையுடன் இன்று மோதியது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக தொடக்க வீராங்கனை திரிஷா 49 ரன்கள் அடித்தார்.
பின்னர் 119 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 58 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் மூலம் 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா இந்த தொடரில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி ஏற்கனவே மலேசியா மற்றும் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இருந்தது.
இலங்கை தரப்பில் அதிகபட்சமாக ராஷ்மிகா 15 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஷப்னம், ஜோஷிதா மற்றும் சிசோடியா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.இந்த போட்டியின் ஆட்ட நாயகியாக திரிஷா தேர்வு செய்யப்பட்டார்.