சாம்பியன்ஸ் டிராபி ஜெர்சி விவகாரம்: ஐ.சி.சி. விதிமுறையை இந்தியா பின்பற்றும் - பி.சி.சி.ஐ. செயலாளர்

3 hours ago 1

புதுடெல்லி,

8 அணிகள் பங்கேற்கும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி பாகிஸ்தானின் கராச்சி நகரில் தொடங்குகிறது. பாதுகாப்பு காரணங்களால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால், இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் போட்டியை நடத்தும் பாகிஸ்தான் பெயர் பொறிக்கப்பட்ட லோகோவுடன் கூடிய ஜெர்சிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ) மறுப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்த தகவலை பி.சி.சி.ஐ. மறுத்துள்ளது. இது குறித்து பி.சி.சி.ஐ. புதிய செயலாளர் தேவஜித் சைகியா கூறுகையில், "சாம்பியன்ஸ் டிராபி தொடரில், ஜெர்சி தொடர்பாக ஐ.சி.சி. எத்தகைய விதியை கொண்டு வருகிறதோ அதை நாங்களும் பின்பற்றுவோம். லோகோ மற்றும் ஜெர்சி விவகாரத்தில் மற்ற அணிகள் எதை செய்கிறதோ அதையே நாங்களும் கடைபிடிப்போம்" என்று கூறினார்.

Read Entire Article