நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமீன் கிடைக்குமா?...சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு

5 hours ago 1

சென்னை,

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோரது ஜாமீன் மனுக்கள் மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

கொகைன் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே தங்களுக்கு ஜாமீன் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் இருவரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டநிலையில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது 8-ந்தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

Read Entire Article