
சென்னை,
'பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக ஹரிஷ் கல்யாண் உள்ளார். இவர் அடுத்ததாக சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் டீசல் படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் "நூறு கோடி வானவில், அந்தகாரம்" ஆகிய படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இதற்கிடையில், 'லிப்ட்' பட இயக்குனர் வினீத் வரபிரசாத் இயக்கும் புதிய படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்துவருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், அதில் பிரீத்தி முகுந்தன் கதாநாயகியாக நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. அதாவது இந்த படத்திற்கு 'தாஷமகான்' என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் படக்குழு இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
