டெஸ்ட் கிரிக்கெட்: ஓய்வு குறித்து மறைமுக தகவலை தெரிவித்த விராட் கோலி

3 hours ago 2

பெங்களூரு,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி அண்மையில் முடிவடைந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அபாரமாக செயல்பட்டு இந்திய அணி கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார். குறிப்பாக பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக சதமும், அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரைசதமும் அடித்து அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.

முன்னதாக கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவின் தோல்விக்கு காரணமாய் அமைந்தார். அதன் காரணமாக பெரிய அளவில் விமர்சனத்தை சந்தித்த அவர், ஓய்வு பெற வேண்டும் சிலர் விமர்சித்தனர். இருப்பினும் அதற்கெல்லாம் அஞ்சாத அவர் சாம்பியன்ஸ் டிராபியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தான் 'கிங்' என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

தற்போது 36 வயதை எட்டியுள்ள அவர், ஏற்கனவே டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்து விட்டார். இருப்பினும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விராட் கோலி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போது ஓய்வு? என்பது குறித்து மறைமுக கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார்.

அதில், "அடுத்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் நான் பங்கேற்காமல் போகலாம். எனவே முன்பு நடந்தவற்றை நினைத்து மன நிம்மதியுடன் இருக்கிறேன். ஓய்வுக்கு பிறகு நான் என்ன செய்வேன் என்று தெரியவில்லை. இது குறித்து சக வீரர் ஒருவரிடமும் கேட்டேன். அவரும் இதே பதிலைத்தான் சொன்னார். ஒருவேளை நான் உலகமெங்கும் பயணிக்கலாம்" என்று கூறினார்.

இதனால் இவர் இன்னும் 1-2 ஆண்டுகளில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Read Entire Article