
சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். செல்லமே திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆன இவர் சண்டக்கோழி, தாமிரபரணி என பல அதிரடி ஹிட் படங்களை கொடுத்து டாப் நடிகளில் ஒருவராக உள்ளார். நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும் இருக்கும் விஷால் படு ஆக்டிவாக இயங்க கூடியவர்.
இவரது தங்கை ஐஸ்வர்யா. இவருடைய கணவர் உம்மிடி கிரிதிஷ். இவர் தொழிலதிபராக உள்ளார். இந்நிலையில், கிரிட்டிஸ் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
ரூ. 2.5 கோடி பணம் பெற்று போலி ஆவணங்கள் மூலம் வீட்டுக்கடன் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டின் கீழ் தொழிலதிபர் கிரிட்டிஸ் மீது சிபிஐ வழக்கு பதிந்துள்ளது.