சென்னை: இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மறைந்த மனோஜ் பாரதி உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக நேற்று (மார்ச் 25) உயிரிழந்தார். அவருக்கு வயது 48. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்களும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.