
சென்னை,
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி காலத்தை மேலும் 3 ஆண்டுகள் நீட்டித்ததை எதிர்த்த வழக்கில், நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என சங்க உறுப்பினர் நம்பிராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். பதவி காலத்தை நீட்டித்தது சங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு விரோதமானது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் நடத்தும் வரை எந்த முடிவுகளும் எடுக்கக் கூடாது என தற்போதைய நிர்வாகிகளுக்கு உத்தரவிடவும் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில், தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் ஜூன் 4ம் தேதிக்குள் பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.