
லாகூர்,
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழ்நிலை உருவாகியுள்ளது. பாகிஸ்தான் மீது இந்தியா ராணுவ தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு செல்லும் அனைத்து விமானங்களையும் பாகிஸ்தான் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்கித், ஸ்கர்டு ஆகிய நகரங்களுகு செல்லும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.