
சென்னை,
10 அணிகள் இடையிலான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரின் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.
இன்றைய ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது .
இந்த போட்டியில் காயம் காரணமாக பஞ்சாப் வீரர் மேக்ஸ்வெல் பங்கேற்கவில்லை . மேக்ஸ்வெல் அடுத்த ஆட்டத்தில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீதமுள்ள அனைத்து போட்டியிலும் இருந்து மேக்ஸ்வெல் விலகியுள்ளார் .