நடிகர் 'அவர்கள்' ரவிக்குமார் மரணம்...திரையுலகினர் அதிர்ச்சி

5 days ago 6

சென்னை,

கேரளாவை சேர்ந்தவர் நடிகர் 'அவர்கள்' ரவிக்குமார்(71). இவர் 70-களில் பல மலையாள படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். 'உல்லாச யாத்ரா' என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், தமிழிலும் சில படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

அதன்பிறகு மலபார் போலீஸ், ரமணா, மாறன், விசில், சிவாஜி, வியாபாரி உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த இவர், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.

இந்த நிலையில் உடல்நலக் குறைவால் இன்று ரவிக்குமார் உயிரிழந்துள்ளார். வேளச்சேரியில் உள்ள மருத்துவமனையில் காலமானதாக அவருடைய மகன் உறுதிப்படுத்தியுள்ளார். நடிகர் 'அவர்கள்' ரவிக்குமாரின் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Read Entire Article