நடிகர் அர்ஜுனின் இளைய மகள் திருமண நிச்சயதார்த்தம்

4 weeks ago 10

இத்தாலி,

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருந்து வருபவர் ஆக்சன் கிங் அர்ஜுன். அர்ஜுன் நடிப்பில் வெளியான 'ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த், கர்ணா, முதல்வன்' போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. சமீபகாலமாக அவர் ஹீரோவாக நடிக்காமல் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அர்ஜுன் நடித்த 'விடாமுயற்சி' திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

அர்ஜுனுக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குநரும் நடிகருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது. இளைய மகள் அஞ்சனாவுக்கு தொழிலதிபராக மாற வேண்டும் என்பதே அவரின் ஆசை. எனவே கடந்த 2023-ம் ஆண்டு 'ஹேண்ட் பேக்' தயாரிக்கும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார். 

இந்த நிலையில், "கடந்த 13 வருடங்களாக காதலித்து வந்த காதலரின், திருமண புரபோசலை ஏற்றுக் கொண்டேன்" என அஞ்சனா தனது இன்ஸ்டாகிராமில் காதலரின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இத்தாலியில் நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகள் நிச்சயதார்த்தம் நடந்தது.

இதை தொடர்ந்து, அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனாவுக்கும் கூடிய விரைவில் திருமணம் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஞ்சனாவின் காதலர் யார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் இப்போது வரை வெளியாகவில்லை. இருப்பினும் இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read Entire Article