காஷ்மீரில் வெடிக்காத 42 பீரங்கி குண்டுகள் அழிப்பு

5 hours ago 1

ஜம்மு,

'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் கடந்த 7-ந் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத கூடாரங்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, கடந்த 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவத் தளங்களைத் தாக்க முயன்றது.

4 நாட்கள் மோதல்களுக்குப் பிறகு 10-ந் தேதியன்று இரு நாட்டினரும் போர் நிறுத்தம் அறிவிப்பை வெளியிட்டனர். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இந்த ராணுவ மோதலின் ஒரு பகுதியாக ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைப்பகுதியில் இரு நாட்டினருக்கும் இடையே கடும் பீரங்கி சண்டை நடைபெற்றது.

அப்போது அங்குள்ள பல்வேறு கிராமங்களில் வெடிக்காமல் கிடந்த 42 குண்டுகளை பாதுகாப்புப் படையினர் தற்போது வெடித்து செயலிழக்க செய்துள்ளனர். அதன்படி அப்பகுதியில் கடந்த 5 நாட்களில் வெடிக்காத 80-க்கும் மேற்பட்ட குண்டுகளை செயலிழக்கச் செய்துள்ளனர்.

Read Entire Article