நடப்பு ஐபிஎல் தொடரில் முதல்முறையாக பெங்களூர்-ஐதராபாத் இன்று மோதல்

3 hours ago 1

டெல்லி: ஐபிஎல் போட்டியில் இன்று இரவு டெல்லியில் நடைபெறும் 65வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
* நடப்புத் தொடரில் இந்த 2 அணிகளும் முதல் முறையாக மோதுகின்றன.
* பெங்களூரில் நடைபெற வேண்டிய இந்த ஆட்டம் டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளது.
* இதற்கு முன் 2 அணிகளும் 25 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன.
* அவற்றில் ஐதராபாத் 13-11 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
* ஒரு ஆட்டம் (2017) மழை காரணமாக கைவிடப்பட்டது.
* இந்த ஆட்டங்களில் அதிகபட்சமாக ஐதராபாத் 287, பெங்களூர் 262 ரன் குவித்துள்ளன.
* குறைந்தபட்சமாக ஐதராபாத் 125, பெங்களூர் 68 ரன்னிலும் சுருண்டுள்ளன.
* இவ்விரு அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் பெங்களூர் 3-2 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.
* நடப்புத் தொடரில் இந்த 2 அணிகளும் தலா 12 ஆட்டங்களில் களம் கண்டுள்ளன.
* ரஜத் பட்டிதார் தலைமையிலான பெங்களூர் 8-3(ஒரு ஆட்டம் ரத்து) என்ற கணக்கில் வெற்றி-தோல்விகளை பெற்றுள்ளது.
* புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளதுடன் பிளே ஆப் வாய்ப்பையும் உறுதி செய்து விட்டது.
* இன்றைய ஆட்டத்திலும், அடுத்த ஆட்டத்திலும் வெல்வதின் மூலம் பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பதுடன், குவாலிபயர் சுற்றுக்கு நேரடியாக தகுதிப் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.
* பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் 4-7(ஒரு ஆட்டம் ரத்து) என்ற கணக்கில் வெற்றி- தோல்விகளை பார்த்துள்ளது.
* 9 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பையும் இழந்து விட்டது.
* கடைசி ஆட்டத்தில் லக்னோவை வீழ்த்தியதின் மூலம் அதன் பிளே ஆப் வாய்ப்பை காலி செய்தது ஐதராபாத்.
* பிளே ஆப் சுற்றுக்கான 4 அணிகளும் தேர்வாகி விட்ட நிலையில் இனி நடைபெறும் ஆட்டங்கள் யாருக்கு எந்த இடம் என்பதை மட்டும் முடிவுச் செய்யும் ஆட்டங்களாக இருக்கும்.

* பிளே ஆப் சுற்றில் 4 அணிகள் ஐபிஎல் வரலாற்றில் சாதனை
நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு குஜராத், பெங்களூரு, பஞ்சாப், மும்பை ஆகிய அணிகள் ஆகிய 4 அணிகள் தகுதி பெற்றுள்ளன. ஐபில் வரலாற்றில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் 4 அணிகள் மிக விரைவாக முடிவானது இந்த சீசனில்தான். ஏழு போட்டிகள் மீதமிருக்கும் நிலையில் பிளே ஆப் சுற்றுக்கான 4 அணிகளும் முடிவாகி உள்ளனர். இதற்கு முன் 2011ம் ஆண்டு 3 போட்டிகள் மீதமிருக்கும் நிலையில் 4 அணிகளும் முடிவாகி உள்ளது.

* ஆர்சிபி அணியில் இருந்து பெத்தேல் விலகல்
பெங்களூரு அணியில் விளையாடி வரும் இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தேல் இன்று நடைபெறும் போட்டியுடன் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடக்கும் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியில் பெத்தேல் இடம்பிடித்து உள்ளதால் அவர் நாடு திரும்ப உள்ளார். இவருக்கு மாற்றாக நியூசிலாந்து வீரர் டிம் செய்பெர்ட்டை பெங்களூரு அணி ஒப்பந்தம் செய்து உள்ளது.

The post நடப்பு ஐபிஎல் தொடரில் முதல்முறையாக பெங்களூர்-ஐதராபாத் இன்று மோதல் appeared first on Dinakaran.

Read Entire Article