நக்சல்களுக்கு எதிரான போர் இறுதிக்கட்டத்தில் உள்ளது - ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன்

1 month ago 7

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பம் மாவட்டத்தில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படை வீரர்கள் சுனில் தன் மற்றும் விஷ்ணு சயினி ஆகிய இருவர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் இருவரும் ஹெலிகாப்டர் மூலம் ராஞ்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சுனில் தன் உயிரிழந்தார். விஷ்ணு சயினிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வீரமரணம் அடைந்த சுனில் தன் உடலுக்கு ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். இதுபோன்ற சம்பவங்களை குறைக்க மாநில அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. வீரமரணம் அடைந்தவரின் குடும்பத்தை அரசு கவனித்துக் கொள்ளும்.

நக்சல்களுக்கு எதிரான போர் இறுதிக்கட்டத்தில் உள்ளது. நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையின்போது, நமது பல வீரர்களை நாம் இழந்தோம். அவர்களால்தான் நாம் இன்று வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம்" என்று தெரிவித்தார். 

Read Entire Article