நகை வாங்குவது போல் தி.நகர் நகை கடையில் 5 சவரன் திருட்டு: 3 பெண்களுக்கு போலீஸ் வலை

3 months ago 14

தாம்பரம்: தி.நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் நகைகள் வாங்குவது போல் நடித்து, 5 சவரன் செயினை திருடிச் சென்ற 3 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர். தி.நகர் உஸ்மான் சாலையில் பிரபல நகைக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் மேலாளர் சிம்சன் (37), மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், கடந்த 10ம் தேதி இரவு நகைக்கடையில் வியாபாரம் முடிந்து அனைத்து நகைகளும் சரிபார்க்கப்பட்டது. அப்போது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 5 சவரன் செயின் மாயமாகி இருந்தது.

உடனே கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, 3 பெண்கள், நகைகள் வாங்குவது போல் நடித்து 5 சவரன் செயினை திருடிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. எனவே சம்பந்தப்பட்ட 3 பெண்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார். புகாரின்படி மாம்பலம் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக கொண்டு 3 பெண்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் 3 பெண்களும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் மீது மாம்பலம் மற்றும் பாண்டிபஜார் காவல் நிலையங்களில் திருட்டு உள்ளிட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
அவர்களை தேடி வருகின்றனர்.

The post நகை வாங்குவது போல் தி.நகர் நகை கடையில் 5 சவரன் திருட்டு: 3 பெண்களுக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Read Entire Article