நகை பட்டறையில் திருட முயன்ற முதியவருக்கு போலீசார் வலைவீச்சு..!

6 months ago 22
நெல்லை பாளையங்கோட்டை கிருஷ்ணன் கோவில் கீழ தெருவில் மாரிகண்ணன் என்பவரது நகை பட்டறையில் திருட முயன்ற முதியவரை போலீசார் தேடி வருகின்றனர். நேற்றிரவு நகை கடை மற்றும் அருகே உள்ள நகை பட்டறையை மூடி விட்டு சென்ற நிலையில், பட்டறையின் ஷட்டர் திறந்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் காலையில் சென்று மாரிகண்ணன் பார்த்தார். அப்போது ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில், பட்டறை லாக்கரை உடைக்க முடியாததால் பல லட்சம் ரூபாய் நகைகள் தப்பியது தெரியவந்தது. சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து போது, சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் திருட முயன்றது தெரியவந்தது.
Read Entire Article