ஓமலூர், மே 10: சேலம் மாவட்டம் ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேசிய அளவிலான மின்னணு கொப்பரை மற்றும் ஆமணக்கு ஏலம் நடைபெற்றது. தற்போது தேங்காய் விலை குறைந்து வரும் வேளையில், கொப்பரை வரத்து குறைந்துள்ளது. ஆக மொத்தம் 1,197 கிலோ கொப்பரை கொண்டு வரப்பட்டது. ரூ.1.90 லட்சத்திற்கு விற்பனையானது. கிலோ ரூ.185க்கு விற்ற கொப்பரை படிப்படியாக ரூ.10 விலை குறைந்து ரூ.175 என விற்பனையானது. அதேபோல், 25 கிலோ ஆமணக்கு ரூ.1,600க்கு விற்பனையானது. அனைத்து விவசாய விளை பொருட்களையும், ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்து பயனடையுமாறு ஒருங்கிணைப்பாளர் ஆனந்தி தெரிவித்துள்ளார்.
The post ஒழுங்குமுறை கூடத்திற்கு கொப்பரை வரத்து குறைந்தது appeared first on Dinakaran.