சேலம், மே 10: சேலம் கருப்பூரில் உள்ள இஸ்கான் கோயில் வளாகத்தில் ‘நரசிம்ஹ சதுர்த்தசி’ விழா நாளை (11ம் தேதி) நடக்கிறது. கோயில் வளாகத்தில் உள்ள திறந்த வெளி அரங்கத்தில் ‘நரசிம்ஹசதுர்தசி’ விழா கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. மாலை 6 மணிக்கு பஜனையும், 7 மணிக்கு அபிஷேகமும், 7.30 மணிக்கு ‘நரசிம்ஹ கதா’ என்ற தலைப்பில் சொற்பொழிவும், 8.30 மணிக்கு அனைவருக்கும் பிரசாதம் விருந்தும் வழங்கப்படும்.
இவ்விழாவில் அனைவரும் கலந்து கொண்டு பகவான் நரசிம்ஹ தேவரின் அருளை பெறலாம். விழாவிற்கான அனைத்தும் ஏற்பாடுகளையும் சேலம் இஸ்கான் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
The post நரசிம்ஹ சதுர்த்தசி விழா appeared first on Dinakaran.