ஏற்காடு, மே 10: கோடை விடுமுறையையொட்டி, ஏற்காட்டிற்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் சுற்றுலா தலங்களில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான ஏற்காட்டிற்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களை மகிழ்விக்கும் விதமாக அண்ணா பூங்கா, ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்காவில் பல்வேறு வகையான மலர் செடிகள் வைக்கபட்டுள்ளன. அதேபோல் அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளை தாயகமாகக் கொண்ட டேலியா, சால்வியா, பிளாகஸ், ஜின்னியா, பெகோனியா, பேன்சி, ஹோலிஹாக், டெல்பினியம், ஜெரானியம், பெட்டுனியா, ஸ்டாக்ஸ், கேலன்டுலா, ஸ்வீட், வில்லியம் உட்பட பல்வேறு வகையான மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு தற்போது பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. நேற்று பல்வேறு இடங்களிலிருந்து ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அண்ணா பூங்காவில் பூத்து குலுங்கும் மலர்களின் நடுவே செல்பி எடுத்தும், குழு புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். கோடை சீசன் களை கட்டியுள்ளதால், ஏற்காட்டில் உள்ள அனைத்து விடுதிகளிலும் அறைகள் நிரம்பி உள்ளது.
The post ஏற்காட்டிற்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.